டிவிட்டர் இந்தியாவின் எம்.டி மணிஷ் மகேஸ்வரி இன்று காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ்
டிவிட்டர் இந்தியாவின் எம்.டி. மணிஷ் மகேஸ்வரி இன்று காசியாபாத் காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் குறை தீர்ப்புக்கும் சட்டரீதியான நடவடிக்கைக்கும் மூன்று அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட மத்திய அரசின் புதிய டிஜிட்டல் விதிகளை டிவிட்டர் நிறுவனம் பின்பற்றவில்லை என்பதால் அந்நிறுவனத்திற்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தியாவில் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட டிவிட்டர் காசியாபாத்தில்ஒரு முஸ்லீம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த சர்ச்சைக்குரிய பதிவுகளை டிவிட்டர் வெளியிட்டதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அதன் நிர்வாக இயக்குனரை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.
காணொலி வாயிலாக விசாரணைக்கு ஆஜராக டிவிட்டர் நிர்வாக இயக்குனர் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து இன்று அவர் போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகிறார்.
Comments