"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 63 லட்சம் பேருக்கு தடுப்பூசி மீண்டும் உத்வேகம் எடுக்கும் தடுப்பூசி இயக்கத்தின் பணிகள்
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 63 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மத்திய அரசின் திருத்தப்பட்ட தடுப்பூசி கொள்கை அமலுக்கு வந்ததில் இருந்து தடுப்பூசி போடப்படும் வேகம் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 11 லட்சம் பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 7 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கும், மகாராஷ்டிராவில் 6 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடுப்பூசி இயக்கத்தின் வேகம் இந்த வாரம் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், நடப்பாண்டு டிசம்பர் 31 க்குள் இந்தியா தனது வயதுவந்தோரை முழுமையாக தடுப்பூசி போட சராசரியாக தினமும் 82 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments