அவன் அப்பவே அப்படியாம்..! மாணவியின் புகாரை மறைத்த பள்ளி வாசல் பள்ளி நிர்வாகம்..! அறிவியல் ஆசிரியர் வேலைக்கு ஆப்பு

0 9654
அவன் அப்பவே அப்படியாம்..! மாணவியின் புகாரை மறைத்த பள்ளி வாசல் பள்ளி நிர்வாகம்..! அறிவியல் ஆசிரியர் வேலைக்கு ஆப்பு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளி வாசல் பள்ளி அறிவியல் ஆசிரியர் 2 வருடத்திற்கு முன்பு பள்ளியில் வைத்தே மாணவியிடம் அத்துமீறி சிக்கிக் கொண்டதாகவும், அப்போது பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் அளிக்காமல் பள்ளி அளவில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவனை காப்பாற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளிக்கூடத்தில், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவிகளிடம் செல்போனில் அழைத்து ஆபாசமாக பேசி, தனது வீட்டிற்கு வருமாறு பாலியல் தொல்லை கொடுத்து வந்த அறிவியல் ஆசிரியர் ஹபீப் முகமது கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவனுக்கு எதிராக புகார்கள் குவிந்து வருகின்றன.

9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவிகள் தனது வலையில் சிக்கவைக்க பலரிடம், செல்போனில் ஆபாசமாக பேசியதோடு, சில மாணவிகளை வீட்டிற்கு வரவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

ஹபீப் முகமதுவால் தொல்லைக்குள்ளானதாக 15 மாணவிகள் காவல்துறையினரிடம் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை சொல்லி அழுதுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஹபீப் முகமதுவுக்கு எதிராக புகார் அளிக்க தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக அறிவியல் ஆசிரியருக்கு எதிராக பல மாணவிகள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பள்ளி வகுப்பறையில் வைத்து மாணவி ஒருவரிடம் ஹபீப் முகமது அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அந்த மாணவியின் பெற்றோர் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்ததும், ஹபீப் முகமதுவை காப்பாற்றும் நோக்கில் மாணவியின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை காரணாமாக சொல்லி, போலீசுக்கு செல்ல வேண்டாம் என்று தடுத்து சமாதானப்படுத்தியதோடு, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி ஆபாச ஆசிரியர் ஹபீப் முகமதுவை பள்ளியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்து மீண்டும் பணிக்கு சேர்த்துக் கொண்டுள்ளனர்.

சில தினங்களில் மீண்டும் ஹபீப் முகமதுவை அதே பள்ளியில் மாணவிகளுக்கு வகுப்பு எடுக்க அனுமதித்ததால், தற்போது மாணவிகளிடம் செல்போனிலும், வாட்ஸ் அப் வாயிலாகவும் பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு முதலே இந்த சேட்டையில் ஈடுபட்டு வரும் ஹபீப் முகமது, சில மாணவிகளிடம் வீட்டில் ஆள் இல்லையென்றால் வாட்ஸ் அப்பில் வீடியோ கால் வார்ரியா? வகுப்பில் நடத்த முடியாத பாடமெல்லாம் சொல்லித்தருகிறேன் என்று ஆசையை தூண்டும் விதமாக பேசி அத்துமீறியுள்ளான்.

கடந்த ஆண்டு பள்ளி மாணவிகள் இதனை வெளியே சொல்ல அஞ்சி இருந்த நிலையில், பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் பள்ளி ஆசியர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆபாச ஆசிரியரின் ஆடியோவை அம்பலப்படுத்தி ஹபீப்பை கம்பி எண்ண வைத்துள்ளனர்.

அதேநேரத்தில் ஆசிரியர் ஹபீப்பை காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல திடுக்கிடும் தகவல் வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments