தமிழ்நாட்டில், 28 மாவட்டங்களில் 200க்கும் கீழாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

0 4871

தமிழ்நாட்டில், 28 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 200க்கும் கீழாக  குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6 ஆயிரத்து 596  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 793 பேர், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஈரோடு - 686, திருப்பூர்  419, சென்னை - 396 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஒரே நாளில் 10 ஆயிரத்து 432 பேர் குணம் அடைந்து வீடு திரும்ப, 24 வயது ராமநாதபுரம் இளைஞர், 97 வயது புதுக்கோட்டை முதியவர் உள்பட166 பேர், கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில், தற்போது 52 ஆயிரத்து 884 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments