கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்.! பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை பேச்சு
கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது. இந்நிலையில் நாட்டு மக்களிடையே தொலைபேசி வாயிலாக உரையாற்றிய பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே, தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வராதவர்கல் கைது செய்யப்படுவர் எனக் கூறினார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இங்கு இருக்கக்கூடாது என தெரிவித்த அவர், இந்தியாவுக்கோ, அமெரிக்காவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ சென்றுவிடுங்கள் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Comments