டெல்டா, டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேறுபாடு என்ன?
டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வைரசின் வேறுபாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்டா வைரஸ் இந்தியாவில் தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் 2வது அலை பரவியது மற்றும் பல்வேறு நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு டெல்டா ரக வைரசே காரணமாகும். டெல்டாவில் இருந்து உருமாறியதே டெல்டா பிளஸ் வைரஸ்.டெல்டா பிளஸ் வகைகளில் உள்ள K417N என்ற ஸ்பைக் புரதத்தின் பிறழ்வால் இவை இரண்டும் வேறுபடுகின்றன.
டெல்டா பிளஸ் வைரஸ் மோனோக்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் சிகிச்சையை எதிர்க்கிறது. ஆசியா, ஐரோப்பா, அமெரிக்காவில் 9 நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது. டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை தான் முதன்முறையாக ஜூன் 11 ஆம் தேதி அறிவித்தது.
தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மிக குறைந்த எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வைரஸ், கொரோனா 3வது அலைக்கு பரவ காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Comments