கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கூலி தொழிலாளி... பிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் உயிரிழந்த சோகம்

0 3301

இராமநாதபுரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கூலி தொழிலாளி ஒருவர் தனக்கு பிறந்த ஆண் குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவரங்குளத்தை தேர்ந்த கூலி தொழிலாளியான கோகுல்நாத்திற்கு ராதிகா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ள நிலையில், 4 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண்குழந்தையும் பிறந்துள்ளது.

இந்நிலையில், கோகுல்நாத்தின் தந்தை ராமைய்யாவிற்கு தொற்று பாதித்த போது உதவியாக இருந்ததால் அவருக்கும் தொற்று பாதிக்கப்பட்டு, 20 நாட்களுக்கு மேலாக கோகுல்நாத் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் உடல் நிலை மோசமடைந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments