நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிக்கு தமிழக அரசுக்கு அதிமுக துணை நிற்கும் - எடப்பாடி பழனிசாமி
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமரிடம் நான்கு ஐந்து முறை வலியுறுத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தற்போது குழப்பமான மன நிலையில் இருப்பதால் நீட் தேர்வு நடக்குமா? இல்லையா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வலியுறுத்தினார்
. இதற்கு பதிலளித்த முதலமைச்சர், கடந்த ஆண்டு இதே கேள்வியை திமுக எழுப்பியதாக சுட்டிக்காட்டியதோடு, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற அதிமுகவும் துணை நிற்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பதிலுக்கு, தமிழக அரசுக்கு கண்டிப்பாக அதிமுக துணை நிற்கும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Comments