டெல்டா எனப்படும் உருமாறிய கொரோனா தொற்று அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது: வெள்ளை மாளிகையின் மருத்துவ ஆலோசகர் தகவல்
டெல்டா எனப்படும் உருமாறிய கொரோனா தொற்று அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதன்முறை கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றுக்கு டெல்டா எனப் பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருவாரங்களுக்கு முன் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரில் 10 விழுக்காட்டினருக்கு டெல்டா வகை தொற்று இருந்தது. அது இப்போது 20 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
தொற்றும் திறன் அதிகமுள்ள டெல்டா வகை உருமாறிய கொரோனா, அதை முற்றாக ஒழிக்கும் அமெரிக்காவின் முயற்சிக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக வெள்ளை மாளிகை தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார்.
Comments