பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை

0 3230
பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை

ப்ஜி மதனின் பண மோசடிக்கு மனைவி கிருத்திகா போல், அவனது பெண் தோழிகள் வேறு யாரெல்லாம் பணம் பெற்றுக் கொண்டு உதவினர் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் ஆபாசமாக பேசியதாக வந்த புகாரில் கைது செய்யப்பட்ட டாக்சிக் மதன், ஏழை, எளியோருக்கு உதவுவதாக கூறி தன்னுடன் விளையாட இணையும் சிறுவர்களிடம் பணம் பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்த மதனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 நாள் காவலில் எடுத்துள்ளனர்.

ஏற்கனவே, 4கோடி பணத்துடன் மதனின் இரண்டு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், அந்த கணக்கில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கிக் கணக்குகள் யாருடையது? என்ன காரணத்திற்காக பணம் அனுப்பப்பட்டது ? போன்ற கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments