கேரளாவில் முழு ஊரடங்கில் நாளை முதல் கூடுதலாக மேலும் சில தளர்வுகள்
கேரளாவில் நாளை முதல் கூடுதலான தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.
கொரோனா தொற்று மாநிலத்தில் குறைந்துவருவதாகத் தெரிவித்த முதலமைச்சர் பினராயி விஜயன் சில கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளார்.
வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வங்கிகள் இயங்கி வந்த நிலையில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களிலும் வங்கிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் வர இந்த இரண்டு நாட்களிலும் அனுமதியளிக்கப்படவில்லை. 15 பேருக்கு மிகாத வழிபாட்டுத் தலங்களைத்திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் தமிழக எல்லையை ஒட்டிய மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.
Comments