எஸ்.பி.ஐ. ATM-ல் சினிமா பாணியில் 20 நொடி திருட்டு.. குவியும் புகார்கள்..! டெல்லியில் 2 பேரிடம் போலீசார் விசாரணை

0 4767
ஸ்டேட் வங்கி டெபாசிட் மிஷின்களில் நூதன முறையில் ஏற்கனவே 48 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், சென்னையில் மேலும் 17 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பது தெரியவந்துள்ளது.

ஸ்டேட் வங்கிடெபாசிட் மெஷின்களில் நூதன முறையில் ஏற்கனவே 48 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், சென்னையில் மேலும் 17 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பது தெரியவந்துள்ளது.

எஸ்பிஐயின் பணம் டெபாசிட் செய்யும் எந்திரத்தில் பணம் எடுக்கவும் முடியும். ஏ.டி.எம். அட்டையை மிஷினுக்குள் செலுத்தி, எடுக்க வேண்டிய தொகையை 20 நொடிகளுக்குள் எடுக்கவில்லை எனில் மீண்டும் பணம் உள்ளேயே திரும்பிவிடும். இந்த தொழில்நுட்பத்தை அறிந்து கொண்ட கொள்ளையர்கள், பணம் வந்தவுடன் 20 நொடி வரை அதை எடுக்காமல் இருந்துவிட்டு, அதன்பின் பணம் மீண்டும் உள்ளே செல்லும் போது, சென்சார் பகுதியில் விரல்களை வைத்து தடுத்து நிறுத்தி பணத்தை மட்டும் எடுத்து விடுவார்கள்.

20 நொடிக்குள் பணம் எடுக்கப்படாததால் ஏ.டி.எம். மிஷினும் பணத்தை வாடிக்கையாளர் எடுக்க வில்லை என கருதிவிடும். இதனால், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் இருப்பு தொகை குறையாது. இந்த தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டு பல லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்த மர்ம நபர்களை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொள்ளை தொடர்பாக எஸ்பிஐ வங்கியின் சென்னை மண்டல முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் அளித்தார். பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்த கும்பல் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்திருப்பதாகவும், சிசிடிவி காட்சிகளை வைத்து மோசடி கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எஸ்பிஐ வங்கியின் தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் பணம் செலுத்தும் எந்திரங்களில் எஸ்பிஐ வங்கி இரண்டு வகையான எந்திரங்களை பயன்படுத்துவதாகவும், அதில் ஜப்பான் நாட்டின் ஓ.கே.ஐ. என்ற நிறுவனம் தயாரித்துக் கொடுத்த ஒரு வகை டெபாசிட் எந்திரத்தில் மட்டுமே கொள்ளை நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்

கொள்ளை கும்பலை பிடிக்க அமைக்கப்பட்ட 2 தனிப்படைகள் வடமாநிலத்திற்கு விரைந்துள்ளன. இந்த நிலையில் சென்னை பெரியமேடு ஏடிஎம்மில் 16 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருப்பதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை மூன்றே நாட்களில் 190 முறை 10 ஆயிரம் ரூபாய் வீதம் இந்தப் பணம் கொள்ளை போய் உள்ளது. இதேபோன்று கீழ்ப்பாக்கத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயும், தி. நகரில் 70 ஆயிரம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 15 இடங்களில் இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்த நிலையில் கொள்ளைக்கும்பலைப் பிடிக்க நேற்று விமானம் மூலம் தனிப்படை போலீசார் டெல்லி மற்றும் ஹரியானா சென்றனர். இதில் ஏடிஎம் டெபாசிட் எந்திரங்களில் நடந்த நூதனக் கொள்ளை தொடர்பாக சிசிடிவி காட்சிகளில் உள்ள அடையாளத்துடன் இருவரை டெல்லியில் பிடித்துள்ளனர்.

இதனிடையே SBI வங்கி ஏ.டி.எம் டெபாசிட் எந்திரங்களில் உள்ள பணத்தை சரிபார்க்க வங்கி மேலாளர்களுக்கு முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments