தனியார் உள்கட்டமைப்புக்கு நிறுவனத்திற்கு எதிராக பேசியதாக அவதூறு வழக்கு - முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு 2 கோடி ரூபாய் அபராதம்

0 3573
தனியார் உள்கட்டமைப்புக்கு நிறுவனத்திற்கு எதிராக பேசியதாக அவதூறு வழக்கு - முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு 2 கோடி ரூபாய் அபராதம்

10 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பெங்களூருவைச் சேர்ந்த Nandi Infrastructure Corridor Enterprises என்ற நிறுவனத்தின் திட்டங்கள் கொள்ளையடிப்பது போன்று இருப்பதாக கடந்த 2011ம் ஆண்டு தேவகவுடா கூறியிருந்தார்.

அவரின் இந்தக் கருத்து தொலைக்காட்சி நேரலையிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதையடுத்து தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக நந்தி நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தது.

கடந்த 10 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நந்தி நிறுவனத்திற்கு தேவகவுடா 2 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என 8வது பெருநகர நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments