தமிழ்நாட்டில் வரும் 28ந் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

0 3522
தமிழ்நாட்டில் வரும் 28ந் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தமிழ்நாட்டில் வரும் 28 ம் தேதி முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில் வரும் திங்கள்கிழமை முதல் கீழமை நீதிமன்றங்களில் நேரடி வழக்கு விசாரணை குறைந்தபட்ச வழக்குகளோடு  நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க மாவட்ட நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற ஊழியர்கள் 75 சதவீதம் பேர், சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் வழக்கு விசாரணை முறைதொடரும் என்றும் , வரும் திங்கட்கிழமை முதல் மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகலாம் என்றும்  உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் விடுத்துள்ள சுற்றறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments