பள்ளிவாசல் பள்ளியில் மாணவிகளை வீட்டுக்கு அழைத்து ஆபாச பாடம்..! வக்கிர ஆசிரியர் வசமாக சிக்கினான்

0 17231

இராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி வாசல் பள்ளிக்கூட அறிவியல் ஆசிரியர் ஒருவர், ஆன் லைன் வகுப்பிற்காக பெற்ற செல்போன் நம்பரில் 20க்கும் மேற்பட்ட மாணவிகளை தொடர்பு கொண்டு தனிமையில் வீட்டுக்கு அழைத்து ஆபாச பாடம் நடத்திய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வேலியே பயிரை மேய்ந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு உதவி பெறும் பள்ளிவாசல் மேல்நிலை பள்ளி உள்ளது. கொரோனா காலமாக இந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் செல்போனில் பாடம் நடத்திவந்தனர்.

இந்த ஆன்லைன் வகுப்பில் செல்போனில் பேசுகின்ற அழகான மாணவிகளை தனியாக அழைத்து பாடம் தொடர்பாக பேசுவது போல பழகுவதை அறிவியல் ஆசிரியர் ஹபீப் வாடிக்கையாக்கி உள்ளான். மாணவிகளின் பெற்றோர் அருகில் இல்லாத நேரங்களில் மாணவிகளை தொடர்பு கொள்ளும் அறிவியல் ஆசிரியரின் ஆராய்ச்சிகள் எல்லை மீற தொடங்கியுள்ளது.

மாணவிகளை அதிக மதிப்பெண் எடுக்க சிறப்பு பாடம் சொல்லித்தருவதாக கூறி தாங்களது வீட்டிற்கு தெரியாமால் புத்தகங்களுடன் தனது வீட்டிற்கு வா என்று அழைப்பதும், அப்படி வர மறுக்கும் மாணவிகளிடம் , வீட்டிற்கு வரவில்லை என்றால் நான் இந்த ஆண்டு தேர்ச்சி அடைய விட மாட்டேன் என்றும் அந்த அறிவியல் ஆசிரியர் ஹபீப் மிரட்ட தொடங்கியதாக கூறப்படுகின்றது.

தனது வீட்டுக்கு வந்தால், தான் பல பாடங்களை சொல்லித்தருவதாக மாணவி ஒருவரிடம் பேசிய வில்லங்க வாத்தியார் ஹபீப், இந்த விசயம் வேறு யாருக்கும் தெரிய வேண்டாம் நமக்குள்ளே இருக்கட்டும் உளறிவிடாதே என்று மாணவியிடம் பேசிய ஆடியோவில் கூறியிருந்தான்.

ஒவ்வொரு மாணவியிடம் வக்கிரமாக பேசும் போதும், சில மாணவிகளின் பெயர்களை குறிப்பிட்டு இதற்கு முன் அந்த மாணவிகள் தனது வீட்டிற்கு வந்ததாகவும் அப்பள்ளி மாணவிகளுடன் பேசிய ஆபாச ஆடியோ பதிவு தற்போது வாட்சாப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் வைரலானதால் ஆபாச பாடம் எடுத்த அறிவியல் ஆசிரியர் ஹபீப் போலீஸ் பிடியில் சிக்கினான்.

முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் டிஎஸ்பி ராகவேந்திரா ரவி காவல் ஆய்வாளர் மோகன் ஆகியோர் இந்த சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் 20க்கும் மேற்பட்ட 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவிகளிடம் ஹபீப் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆபாச ஆசிரியர் ஹபீப்பை போலீசார் கைது செய்தனர்.

பத்மசேசாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையை பார்த்து தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் உள்ள மாணவிகளும் துணிச்சலுடன் புகார் அளிப்பதால், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த காமுக ஆசிரியர்கள் ஒவ்வொருவராக ஜெயிலுக்கு அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடதக்கது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments