மின்சார வாகனங்கள் வாங்கினால் ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்-குஜராத் அரசு அறிவிப்பு
பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனங்கள், கார்களை வாங்குவோருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான புதிய கொள்கையை குஜராத் அரசு அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த 4 ஆண்டுகளில் 2 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஊக்கதொகை வழங்குவதற்காக 870 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பேட்டரியில் இயங்கும் இருசக்கரவாகனங்களுக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் ரூபாயும், கார்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரையும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கு 25 சதவீதம் வரை 10 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
Comments