பொதுத்தேர்வு ரத்து - சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ முடிவை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளை ரத்து செய்த சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ யின் முடிவை எதிர்த்து தாக்கலான மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை கணக்கிடுவது குறித்த மதிப்பீட்டு விதிகளுக்கு எதிராக தாக்கலான மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அரசும் இந்த கல்வி வாரியங்களும் சேர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பொது நலன் கருதி உயர்மட்ட அளவில் எடுத்த இந்த முடிவுகளை நாங்கள் மாற்ற முடியாது என இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் ஏ.எம்.கன்வாலிகர், தினேஷ் மகேஸ்வரி அமர்வு தெரிவித்தது.
IIT-JEE அல்லது CLAT தேர்வுகள் நேரிடையாக நடத்தப்படும் போது, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ தேர்வுகளையும் ஏன் நடத்தக்கூடாது என மனுதாரர் தரப்பில் கேட்கப்பட்டதை நிராகரித்த நீதிபதிகள்,மதிப்பீட்டு வழிமுறைக்கு சிபிஎஸ்இ13 கல்வி நிபுணர்களின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறினர்.
Comments