சிமெண்ட் விலை ரூ.460 ஆக குறைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் தங்கம் தென்னரசு
உற்பத்தியாளர்களுடன் பேச்சு நடத்தி, 490 ரூபாய் ஆக இருந்த மூட்டை சிமெண்ட் விலையை, 460 ரூபாயாக குறைத்துள்ளதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
கம்பி உற்பத்தியாளர்களுடன் பேச்சு நடத்தி, ஒரு டன் கம்பியின் விலை 1100 ரூபாய் வரை குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் விளக்கம் அளித்த அவர், புதிய ஆய்வுக்காக மாநில சுற்றுச்சூழல் குழுவிடம் ஓஎன்ஜிசி விண்ணப்பித்தது என தெரிவித்தார்.
அரியலூர், கடலூரில் எண்ணெய் கிணறுகளுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், அறந்தாங்கி பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி இல்லை என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது எனறும் அமைச்சர் உறுதியளித்தார்.
Comments