தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருட்டு போன குழந்தையை இரண்டே நாட்களில் பத்திரமாக மீட்ட போலீசார்

0 2726
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து திருடபட்ட பச்சிளம் குழந்தை இரண்டே நாட்களில் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து திருடபட்ட பச்சிளம் குழந்தை இரண்டே நாட்களில் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த மாலினிக்கு தருமபுரி அரசு மருத்துமனையில் கடந்த சனிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்தது. மாலினி கழிவறை சென்றிருந்த நேரத்தில் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தையை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் திருடிச் சென்றார்.

மருத்துவமனையிலிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணையில் ஈடுபட்ட போலீசார், இண்டூரை சேர்ந்த தஞ்சனா என்பவர் தனது கணவர் ஜான் பாஷாவுடன் இணைந்து குழந்தையை திருடியதை கண்டுபிடித்தனர்.

அவர்களிடமிருந்து குழந்தையை மீட்ட போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments