ஆஸ்ட்ராஜெனகா அல்லது ஃபைசர் தடுப்பூசி இரண்டு டோசுகளை போட்டால் B1.617.2 வைரசிடம் இருந்து பாதுகாப்பை தரும் - இங்கிலாந்து அரசு நடத்திய புதிய ஆய்வில் தகவல்
ஆஸ்ட்ராஜெனகா அல்லது ஃபைசர் தடுப்பூசியின் இரண்டு டோசுகளை போட்டால் இந்தியாவில் முதலில் பரவிய B1.617.2 மரபணு மாற்ற வைரசில் இருந்து 87சதவிகித பாதுகாப்பை பெறலாம் என இங்கிலாந்து அரசு நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் கென்ட் பிராந்தியத்தில் இந்த மரபணுமாற்ற வைரஸ் மிகவும் அதிவேகத்தில் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆஸ்ட்ராஜெனகா மற்றும் பைசர் தடுப்பூசிகள் அதை கட்டுப்படுத்தும் திறன் வாய்ந்தவைகளாக உள்ளன என அந்த நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி சீரம் இந்தியா நிறுவனத்தால் கோவிஷீல்டு என்ற பெயரில் உற்பத்தி செய்யப்பட்டு அதிக அளவில் போடப்பட்டு வருகிறது.
Comments