தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்-வானிலை ஆய்வு மையம்

0 3219
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள் உட்பட சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள் உட்பட சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு அரியலூர், பெரம்பலூர், கடலூர், தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளையும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 5 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments