அரசின் உத்தரவை மீறி பேருந்துகளில் நின்று கொண்டு பயணிக்கும் பயணிகள்
சென்னையில் சில வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக சென்னையில் சாதாரண கட்டண பேருந்துகளில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மணலி பிராட்வே, திருவிக நகர் - நீதிமன்றம், பெரம்பூர் - பெசன்ட்நகர் வழித்தடங்களில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணிப்பதையும் காண முடிகிறது.
மேலும் வியாசர்பாடி , வள்ளலார் நகர் பகுதிகளில் ஷேர் ஆட்டோவில் ஆறு பேர் வரை பயணிக்கின்றனர்.
Comments