இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு புதிய கட்டுபாடுகள் விதிக்க நுகர்வோர்-உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகம் முடிவு

0 2665
இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு புதிய கட்டுபாடுகள் விதிக்க நுகர்வோர்-உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகம் முடிவு

காமர்ஸ் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நுகர்வோர்-உணவு மற்றும் பொதுவிநியோக அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

அதன்படி இ-காமர்ஸ் ரீடெயில் நிறுவனங்கள், தொழில்வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையில் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்படுகிறது.

மேலும் அளவுக்கு அதிகமான ஆஃபர்களுடனான அதிரடிசேல்ஸ் போன்றவற்றுக்கு  தடை விதிக்கப்படும். நிறுவனங்கள் இணையத்தில் மேற்கொள்ளும் வர்த்தகம் தொடர்பாக அரசு கேட்கும் விவரங்களை  72 மணி நேரத்திற்குள்   பகிர்ந்து கொள்வதும் அவசியமாகும்.

வாடிக்கையாளர்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கைக்கு குறை தீர்க்கும் அதிகாரி, தொடர்பு மற்றும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளை இ காமர்ஸ் நிறுவனங்கள் நியமிக்க வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments