உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி லட்சக்கணக்கில் பணம் மோசடி - 5 பேர் கைது
உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கி லட்சக்கணக்கில் பணம் வசூலித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீராம் ஜென்மபூமி ட்ரஸ்ட், அயோத்தியா என்ற பெயரில் உள்ள இணையதளத்தில் வங்கிக் கணக்கு எண் இணைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்ட சிலர் காவல்துறைக்கு புகாரளித்ததில் லக்னோ மற்றும் நொய்டா சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அது போலி இணையதளம் என்றும், ராமர் கோவில் பெயரை வைத்து பணம் ஈட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பிட்ட இணையதளத்தை நடத்தி வந்த ஆஷிஷ் குப்தா, நவின்குமார் சிங், சுமித்குமார், அமித் ஜா, சூரஜ் குப்தா ஆகியோரை உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.
Comments