தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் காலைத் தொட்டு வணங்கிய மாவட்ட ஆட்சியர்கள்

0 3303
தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் காலைத் தொட்டு வணங்கிய மாவட்ட ஆட்சியர்கள்

தெலங்கானாவில் இரு மாவட்ட ஆட்சியர்கள் முதலமைச்சரின் காலில் விழுந்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிந்திபேட் மாவட்டத்தில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திறந்து வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்த சிந்திபேட் மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடராமி ரெட்டி எழுந்து சந்திரசேகர ராவின் காலைத் தொட்டு வணங்கினார்.

கமரெட்டி மாவட்ட ஆட்சியரான ஏ. சரத் என்பவரும் முதல்வரின் காலைத் தொட்டு வணங்கினார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் சுயமரியாதையை அடமானம் வைத்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனக்கு தந்தை போன்றவர் என்பதால் காலைத் தொட்டு வணங்கியதாக வெங்கடராமி ரெட்டி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments