எதிர்காலத்தில் தடுப்பூசிகள் டெல்டா வைரசுக்கு எதிராக திறனை இழக்கும் அபாயம் - உலக சுகாதார அமைப்பு
எதிர்காலத்தில் கொரோனா தடுப்பூசிகள் டெல்டா வைரசுக்கு எதிராக போராடும் குணத்தை இழக்கும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பின் தொற்று நோய் இயல் நிபுணர் ஒருவர் கூறுகையில், இந்த தடுப்பூசிகள் தற்போது உயிரிழப்பு மற்றும் கடுமையான நோய் தாக்கத்தை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார்.
டெல்டா வகை வைரஸ் உருமாற்றம் பெற்று டெல்டா பிளஸ் வைரசாக இந்தியாவில் வேகமாக பரவி கடுமையான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த டெல்டா பிளஸ் வகை வைரஸ் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி இருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
Comments