புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு

0 2951
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு

புதுச்சேரியில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடற்கரை சாலை மற்றும் பூங்காக்களில் காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை நடைப் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிகளில் 100 நபர்களும், இறுதி சடங்கில் 20 பேரும் பங்கேற்கலாம் எனவும், சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை 100 நபர்களுடன் நடத்திக்கொள்ளவும் புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments