இந்தியாவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 85 லட்சம் பேருக்கு போடப்பட்ட கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 85 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். மேலும், மாநில அரசுகளுக்கு மத்திய அரசே நேரடியாக கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார்.
அந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று நாடு முழுவதும் 85 லட்சத்து 15 ஆயிரத்து 765 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 15 லட்சம் பேருக்கும், கர்நாடகாவில் 10 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. உத்தரப்பிரதேசம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் தலா 5 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இதுகுறித்து பிரதமர் மோடி தமது ட்விட்டர் பதிவில், இந்தச் சாதனை மகிழ்ச்சியளிப்பதாகவும், இதற்காக பாடுபட்ட முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments