மன்மத போலீஸ்கார் டிடெக்டிவ் மனைவி..! முத்து சங்கு... வேலைக்கு சங்கு..!

0 7582
மன்மத போலீஸ்கார் டிடெக்டிவ் மனைவி..! முத்து சங்கு... வேலைக்கு சங்கு..!

மதுரையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர், முகநூல் மூலம் ஏராளமான பெண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றியதாக மனைவியே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

உதவி ஆய்வாளர் என ஏமாற்றி திருமணம் செய்த காவலரை துப்பறிந்து பிடித்த மனைவி

மதுரை ரிசர்வ்லைன் காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் காவலர் முத்துசங்கு . இவர் கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பி.இ. பட்டதாரியான சுபாஷினியை திருமணம் செய்து கொண்டார் .

முன்னாள் அமைச்சர் ஒருவரின் அரசு இல்லத்தில் பாதுகாவலராகப் பணிபுரிந்த காவலர் முத்துசங்கு, தன்னை உதவி ஆய்வாளர் எனக் கூறி ஏமாற்றிவிட்டதாக அவரது மனைவி சுபாஷினி வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்த நிலையில் எப்போதும் செல்போனும் கையுமாக சுற்றிய முத்துசங்கு, அதில் சாட்டிங் செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இதனால் சந்தேகமடைந்த மனைவி அவரது செல்போனை எடுத்து பார்த்தபோது பேஸ்புக் மெசஞ்சரில் 15க்கும் மேற்பட்ட பெண்களிடம் போலியான ஐடிகளை பயன்படுத்தி ஆபாசமாக பேசியுள்ளதையும், ஆபாசமான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து கணவரிடம் கேட்டபோது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனால் கணவனை பிரிந்து தாய்வீட்டுக்கு சென்ற சுபாஷினி கணவனின் சாட்டிங் சேட்டைகள் குறித்து தல்லாகுளம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அமைச்சரின் அலுவலகத்தில் பணிபுரிந்ததால் காவலர் முத்துசங்கு மீது அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. கணவரின் பெற்றோரிடம் கூறியபோது அவர்களும் கண்டுகொள்ளாத நிலையில் மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது தான் திருந்தி வாழ்வதாகக் கூறி எழுதிகொடுத்துள்ளார்.

இதனை நம்பி தனது கணவருடன் சென்று சுபாஷினி சேர்ந்து வாழ்ந்த நிலையில், வரதட்சணை குறைவாக கொண்டு வந்ததாக கூறி முத்துசங்கு சண்டையிட்டதாகக் கூறப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக தனது கணவர் மீண்டும் செல்போனில் சமூகவலைதளங்களில் பேக் ஐடியில் மூலமாக பல பெண்களுடன் ஆபாசமாக பேசிவந்ததை கண்டுபிடித்த சுபாஷினி அந்த பதிவுகளில் திருமணமான மற்றும் இளம்பெண் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரிடம் தன்னை காவல்துறை உயரதிகாரி என கூறி பழகி தனது கணவர் முத்துசங்கு, அந்த பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை பெற்றுகொண்டு அதனைவைத்து மிரட்டி பல்வேறு இடங்களுக்கு அழைத்துசென்று வந்ததை முகநூல் மெசஞ்சர் உரையாடல் மூலம் கண்டுபிடித்துள்ளார்.

அதில் சில பெண்கள் தன்னை விட்டுவிடுமாறு கூறி கேட்டபோது, தன்னுடன் நெருக்கமாக இருந்ததை அவர்களின் கணவரிடம் கூறிவிடுவதாகக் கூறி மிரட்டி பணம் பெற்றுள்ளதையும் ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளார்.

இந்த விவரங்களை மதுரை மாநகர காவல் ஆணையரிடம் தனது பெற்றோருடன் வந்து புகார் மனு அளித்தார் சுபாஷினி.

தனது கணவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து வரதட்சணை கொடுமை செய்ததோடு, பல பெண்களுக்கு சமூகவலைதளங்களில் மூலம் ஏமாற்றி பாலியல் மிரட்டலில் ஈடுபட்டுள்ளதாகவும் தனது வாழ்க்கை போனாலும் பரவாயில்லை தன் கணவரை நம்பி ஏமாந்த இளம்பெண்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அவர் குறிப்பிட்டாள்ளார்.

 

காவலர் ஒருவர் போலியான முகநூல் கணக்குகள் மூலமாக ஏராளமான பெண்களை ஏமாற்றிவருவதாக மனைவியே ஆதாரத்துடன் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments