சூப்பர் மூன், பிளட்மூன் வரிசையில் ஸ்ட்ராபெரி மூன்..!
சூப்பர் மூன், பிளட்மூன் வரிசையில் வரும் 24 ஆம் தேதி ஸ்ட்ராபெரி மூன் என்ற பெயரில் முழு நிலவு தோன்றுகிறது.
பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் நிலநடுக்கோட்டுக்கு மேலே உள்ள நாடுகளில் கோடை காலம் துவங்குகிறது. அங்கு இரவை விட பகல்பொழுது நீளமாக இருக்கும். இளவேனில் காலம் முடிந்து இளவேனில் காலத்தின் கடைசி மற்றும் கோடை காலத்தின் முதலாவது முழு நிலவு, ஸ்ட்ராபெரி மூன் என அங்கு அழைக்கப்படுகிறது.
ஆனால் இது சூப்பர்மூன் போல பெரிதாக இருக்காது. பண்டையகாலத்தில் அமெரிக்க பூர்வகுடிகள் ஸ்ட்ராபெரி அறுவடைக்கு தயாராகும் போது தோன்றிய முழு நிலவை இந்த பெயரிட்டு அழைத்தனர். இது ஐரோப்பாவில் ரோஸ்மூன் என்றும் அழைக்கப்படுகிறது.
Comments