உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலுக்கு அதிர்வு சோதனை நடத்திய அமெரிக்கா

0 6001

உலகின் மிகப்பெரியதும், 333 மீட்டர் நீளமுள்ளதும், புதியதுமான USS Gerald R Ford போர்க்கப்பல், முழுமையான அதிர்வு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வீடியோ காட்சிகளை அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் கிழக்கு கடலில் இந்த கப்பலுக்கு மிக அருகில் சுமார் 20 டன் வெடிமருந்துகள் வெடிக்க வைக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட அதிர்வுகளை கப்பல் தாங்கியதா என சோதித்து பார்க்கப்பட்டது. அப்போது வெடிமருந்துகளின் தாக்கத்தால் கடல் நீர் சிறு குன்று போல மேலெழும்பியது...

சவாலான அல்லது போர்க்காலங்களில் புதிய போர்க்கப்பல்களால் தாக்குபிடிக்க முடியுமா என்பதை சோதிக்க இந்த அதிர்வு சோதனை நடத்தப்பட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.

இதனிடையே புளோரிடாவுக்கு கிழக்கே 161 கிலோ மீட்டர் தொலைவில் ரிக்டர் அளவையில் 3.9 ஆக நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்காவின் ஜியாலஜிகல் சர்வே துறை தெரிவித்துள்ளது. இந்த சோதனையின் விளைவாக நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சில அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments