கொரோனா சோதனை செய்வதாகக் கூறி புதிய ஆன்லைன் மோசடி - எச்சரிக்கும் போலீசார்..!
கொரோனா சோதனை செய்வதாகக் கூறி, போலி இணையதளங்கள் மூலம் நடைபெறும் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
கொரோனா சோதனைக்கான ஆய்வகங்கள் குறித்து இணையத்தில் தேடும்போது, பட்டியலிடப்படும் லிங்க்குகளை அப்படியே நம்பி விட வேண்டாம் என்றும், பிரபலமான ஆய்வகங்களைப் போல ஸ்பெல்லிங் அமைத்திருப்பார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தளங்கள், வீட்டிற்கே வந்து மாதிரி எடுப்பதாகக் கூறி பணம் வசூலிக்கின்றனர் என்றும், வீட்டிற்கே வந்து மாதிரிகளை சேகரித்துச் சென்றும், பணம் வசூலிக்கின்றனர் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
அதன் பிறகு முடிவுகள் வராது அல்லது பொய்யான முடிவுகள் தெரிவிக்கப்படும். மேலும் ஆன்லைன் பிரதிநிதிகளுடன் பேசும்போது தனிப்பட்ட தகவல்கள், கடவுச்சொல் அல்லது வேறு எந்த முக்கியமான ஆவணங்களையும் பகிர வேண்டாம்,
Comments