பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதே பாலியல் வன்முறைகள் அதிகரிக்க காரணம் என கூறிய பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு

0 5407

பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதே பாலியல் வன்முறைகள் அதிகரிக்க காரணம் என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சுக்கு, சமூக ஊடகங்களில் பெரும் எதிர்ப்பு உருவாகி உள்ளது.

HBO தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பெண்கள் உடலை காட்டும் வகையில் ஆடை அணிந்தால், ரோபோக்களாக இல்லாமல் இருந்தால் தவிர,அது ஆண்களிடம் உணர்வை தூண்டும் என இம்ரான் கான் கூறினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இணையவாசிகளும், பாகிஸ்தானின் எதிர்க்கட்சியினரும், இம்ரான் கான் பாலியல் வன்நிகழ்வுகளை ஆதரிப்பவர் என்றும், பாலியல் வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிரானவர் என்றும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments