குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சுகாதார ஆய்வாளர்... 2 பேர் பரிதாப பலி

0 5468

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் குடிபோதையில் சுகாதார ஆய்வாளர் ஓட்டி வந்த கார் மோதிய விபத்தில் சாலையோரம் நின்றிருந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வடமதுரை சுகாதார அலுவலகத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பாலக்குமார், நேற்றிரவு தனது டொயோட்டோ  காரை குடிபோதையில் அதிவேகமாக ஓட்டி வந்துள்ளார். கார் வடமதுரை சாலையில் வந்த போது, வந்த வேகத்துக்கு கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியது.

பின்னரும், தறிகெட்டு ஓடிய கார் அருகே கொட்டப்பட்டுக் கிடந்த மணற் குவியலில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்த பழனிசாமியும், சந்திரசேகரும் தூக்கிவீசப்பட்டனர். ஒருவர் மருத்துவமனையிலும், ஒருவர் சம்பவ இடத்திலையும் உயிரிழந்த நிலையில், காரை ஓட்டி வந்த சுகாதார ஆய்வாளர் காயமின்றி தப்பினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments