சசிகலா தொலைபேசி உரையாடலுக்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் முன்னாள் மாவட்ட செயலாளர் காருக்கு தீ வைப்பு

0 3906
சசிகலா தொலைபேசி உரையாடலுக்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் முன்னாள் மாவட்ட செயலாளர் காருக்கு தீ வைப்பு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியதற்காக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகியின் காரை, மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி வைத்து தீ வைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளராக இருந்த வின்சென்ட் ராஜா, சசிகலாவிடம் போனில் பேசிய ஆடியோ வெளியானதையடுத்து சில நாட்களுக்கு முன்பு கட்சியியில் இருந்து நீக்கப்பட்டார்.

தனது தார் பிளாண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் காவலாளி விடுமுறை என்பதால், அங்கு டாடா நெக்சான் காரை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்குள் உறங்கியுள்ளார்.

அதிகாலை மிகப்பெரிய சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த போது மர்ம நபர்கள் சிலர் கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவத்தில் வின்சென்ட் ராஜாவின்  கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments