மே மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் ஜூலை 15ந் தேதி வரை செல்லும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்

0 3060
மே மாதத்திற்கான ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் ஜூலை 15ந் தேதி வரை செல்லும் - போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன்

மே மாதம் எடுத்த ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ் ஜூலை 15 வரை செல்லும் என தெரிவித்துள்ள போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் கட்டணமின்றி பயணம் செய்ய அடையாள அட்டை கட்டாயம் என்று கூறியுள்ளார்.

சென்னை பல்லவன் இல்லத்தில் பேருந்துகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

தினசரி இரவு 9.30 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும், பயணிகளின் வருகை அதிகரித்தால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments