அடுத்த தேர்தலில் சிவசேனா தனித்துப் போட்டியிடலாம் -காங்கிரசுக்கு சிவசேனா எச்சரிக்கை

0 6154
அடுத்த தேர்தலில் சிவசேனா தனித்துப் போட்டியிடலாம் -காங்கிரசுக்கு சிவசேனா எச்சரிக்கை

டுத்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணியை முறித்து சிவசேனா தனித்துப் போட்டியிடக் கூடும் என்று அக்கட்சியின் தலைவரும் மகாராஷ்ட்ர முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பொது மக்கள் கொரோனாவுக்கு எதிராக போராடி வருவதாகவும், நிதிப் பற்றாக்குறையில் தவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனா காலத்தில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்காமல் தேர்தல் பலப்பரீட்சை பற்றி பேசும் சுயநல அரசியலை மக்கள் சகித்து கொள்ள மாட்டார்கள் என்று காங்கிரசுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

பொது மக்கள் சாலைகளில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படும்போது, நமது சொந்த பலத்தை காட்டுவதில் என்ன பயன்? என்றும் தாக்கரே கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments