18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என பிரதமர் மோடி அறிவித்த திட்டம் இன்று துவக்கம்

0 3171
18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என பிரதமர் மோடி அறிவித்த திட்டம் இன்று துவக்கம்

நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என பிரதமர் மோடி அறிவித்த திட்டம் இன்று துவங்குகிறது.

இதற்காக மத்திய அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசிகளை மாநில அரசுகள் முன்னுரிமை அடிப்படையில் போட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுகாதார பணியாளர்கள்,முன்களப்பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டாம் டோஸ் நிலுவையில் உள்ளவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற முன்னுரிமை வரிசையில் தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக மொத்தம் உற்பத்தியாகும் தடுப்பூசியில் 75 விழுக்காட்டை மத்திய அரசே வாங்கி மாநிலங்களுக்கு வழங்கும்.

இனிமேல் தடுப்பூசி போட CoWin தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், நேரடியாக தடுப்பூசி மையங்களுக்கு சென்று பதிவு செய்து தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments