உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகா

0 3212
உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகா

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், 18 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய- திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர்.

Pang gong ஏரிக்கரையிலும் இமாச்சல பிரதேசத்தின் 16 ஆயிரம் அடி உயர பனிமலையிலும் நடைபெற்ற யோகா பயிற்சியில் ஏராளமான வீரர்கள் கலந்துக் கொண்டனர்

ஜம்முவில் துணை ராணுவப் படையினருக்காக சிறப்பு யோகா பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

டெல்லி மகாராஜா பூங்காவில் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வரதன் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதே போல் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, பிரகலாத் பட்டேல் உள்ளிட்டோரும் யோகா சிறப்பு நிகழ்வில் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments