கோவிட் நோயால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க இயலாது உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்
கோவிட் நோயால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க இயலாது என்று மத்திய அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் நிதி நெருக்கடியை இதற்குக் காரணமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 24 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அரசுக்கு அனுப்பிய நோட்டீசில், பல கோரிக்கை மனுக்கள் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4 லட்சம் ரூபாய் வரை நிவாரணத் தொகை வழங்குவது குறித்தும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு நாட்டின் தற்போதைய நிதி நிலைமையில் இதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.
இருந்த போதும் அரசு உதவி தேவைப்படுவோருக்கு பெரிய அளவில் நிதி மற்றும் நிவாரண உதவிகள் செய்து வருவதாகவும் அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments