சென்னையில் ஜூன் 21ஆம் தேதி முதல் இரு வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கம்
சென்னை மாநகரில் 40 நாள் இடைவெளிக்குப்பின் திங்கட்கிழமை முதல் மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயக்கப்படுகின்றன.
மெட்ரோ ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து, காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரை ஒரு வழித்தடத்திலும், பரங்கிமலை - சென்ட்ரல் இடையே மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் ஓடும்.
பயணிகள், முகக்கவசம் அணிந்து, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு, சென்னை மெட்ரோ அறிவுறுத்தியுள்து.
Comments