11 மாவட்டங்கள் தவிரப் பிறவற்றில் பேருந்துப் போக்குவரத்துக்கு அனுமதி - குளிர்வசதியின்றி 50 சதவீத இருக்கைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லலாம்

0 7616
11 மாவட்டங்கள் தவிரப் பிறவற்றில் பேருந்துப் போக்குவரத்துக்கு அனுமதி - குளிர்வசதியின்றி 50 சதவீத இருக்கைகளில் பயணிகளை ஏற்றிச் செல்லலாம்

தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிரப் பிற 23 மாவட்டங்களில் அந்தந்த மாவட்டத்துக்குள் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள் குளிர் வசதி இல்லாமல், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிடையே பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள் குளிர் வசதி இல்லாமல், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும்.

மெட்ரோ இரயில்களில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து செல்ல அனுமதிக்கப்படும்.

11 மாவட்டங்கள் தவிரப் பிற மாவட்டங்களில் திருமண நிகழ்வுகளுக்கு மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ் பெற்றுச் சென்றுவர அனுமதிக்கப்படும்.

இணைய வழியில் விண்ணப்பித்துத் திருமணம் நடைபெறும் மாவட்டத்தின் ஆட்சியரிடமிருந்து இ - பாஸ் பெறலாம். திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் கலந்து கொள்ளலாம்.

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசரக் காரணங்களுக்காக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ - பாஸ் பெற்றுச் செல்லலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments