நோய் பரவலை தடுக்க கார்களிலேயே உணவு வழங்கும் In-Car Dining சேவை துவக்கப்படும் - கேரள அரசு
உணவு விடுதிகளில் அமர்ந்து உண்ணுவதால் ஏற்படும் நோய் தொற்றை தவிர்க்க, பயணிகளுக்கு, அவர்களின் வாகனங்களிலேயே உணவு வழங்கும் In-Car Dining சேவை துவக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தணிந்த பின்னர் சுற்றுலாத் துறை மெல்ல மெல்ல உத்வேகம் பெறும் என எதிர்பார்ப்பதால், பொதுநலன் கருதி இந்த திட்டத்தை துவக்க உள்ளதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகம்மது ரியாஸ் தெரிவித்தார்.
கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான ஆஹார் உணவு விடுதிகளில் , கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு, இந்த முறையில் காலை -மதிய-இரவு உணவுகள் கார்களில் வழங்கப்படும் என அவர் கூறினார்.
Comments