புதுச்சேரியில் எம்.எல்.ஏ. ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி ஆதரவாளர்கள் போராட்டம்

0 2626
புதுச்சேரியில் எம்.எல்.ஏ. ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி ஆதரவாளர்கள் போராட்டம்

புதுச்சேரியில் எம்.எல்.ஏ. ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட்டு பெயர்பலகைகளை கிழித்த அவரது ஆதரவாளர்கள் 20பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீண்ட இழுபறிக்கு பின்னர், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில், பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டன. இந்த இரண்டு அமைச்சர் பதவிகளையும் யாருக்கு ஒதுக்குவது என பா.ஜ.க.வில் சிக்கல் எழுந்துள்ளது.

தேர்தலுக்கு முன் காங்கிரஸில் இருந்து விலகி, பாஜ.க.சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க முதலில் முடிவு செய்யப்பட்ட நிலையில், கட்சியில் நீண்ட காலமாக இருந்து வரும் நிர்வாகிகள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் இழுபறி நீடித்து வருகிறது.

இந்தநிலையில், ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அவருடைய ஆதவராளர்கள், அங்கிருந்த பேனர்களைக் கிழித்து, ஷட்டர்களை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் மீது தனிநபர் இடைவெளியின்றி ஒன்று கூடியதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments