கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

0 2596

கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ள காரணிகளைக் கண்காணிக்கும்படி மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்துள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளதையடுத்துக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

டெல்லியில் சந்தைகளிலும், பொது இடங்களிலும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தடுப்பு விதிமீறலைத் தடுக்கக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும்படி உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் மத்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ள காரணிகளைக் கண்காணிக்கவும், கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments