நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கிய தொழில் வளர்ச்சித் துறைச் செயலர் குருபிரசாத் மொகாபாத்ரா கொரோனாவால் உயிரிழப்பு

0 5062

நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜன் வழங்கலைக் கண்காணித்த தொழில் வளர்ச்சித் துறைச் செயலர் குருபிரசாத் மொகாபாத்ரா கொரோனா பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கொரோனா பேரிடரைத் தணிக்க அமைத்த அதிகாரமிக்க குழுவின் தலைவராகச் செயல்பட்ட குருபிரசாத் மொகாபாத்ரா, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்தும், பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தும் தேவைப்படும் இடங்களுக்கு வழங்க ஏற்பாடுகளைச் செய்தவர்.

கொரோனா தொற்றால் ஏப்ரல் 19ஆம் நாள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பயனின்றி நேற்றுக் காலமானார்.

அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவருடன் தனக்குள்ள நீண்டகாலத் தொடர்பை நினைவுகூர்ந்துள்ளார்.

இதேபோல் மத்திய அமைச்சர்கள் பலரும், துறைச் செயலர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் தனக்கு கொரோனா தொற்றுள்ளதாகத் தெரிந்த பின்னரும் ஆக்சிஜன் வழங்கலைக் கண்காணிக்கப் பலமணி நேரம் பணியாற்றியதாக அமைச்சரவைச் செயலர் ராஜீவ் கவுபா தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments