சென்னை பட்டினப்பாக்கத்தில் மீன் வாங்க குவிந்த கூட்டம்..! சிந்தாதிரிப்பேட்டை, காசிமேட்டிலும் தனிமனித இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டது
சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன்கள் வாங்க முண்டியடித்துக் கொண்டு கூடிய மக்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், டீசல் விலை உயர்வு காரணமாக 30சதவீத படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. வரத்து குறைவாக இருந்ததால் விலையும் 2மடங்கு அதிகரித்து காணப்பட்டது. 500 ரூபாய்க்கு விற்கப்படும் வஞ்சரம் மின், ஆயிரம் ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனையான சங்கரா மீன் மற்றும் இறால் ஆகியவை 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன.
மக்களும் பாதுகாப்பு வழிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு முண்டியடித்துக் கொண்டு மீன்கள் வாங்கியனர். இதேபோன்று, சிந்தாதிரிப்பேட்டை, பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டிலும், தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமல் வியாபாரிகளும், பொதுமக்களும் அலட்சியமாக செயல்பட்டனர்.
Comments