கிராம மக்களுக்கு தடுப்பூசி போட அரை நாள் பயணிக்கும் சுகாதாரத்துறையினர்..! ஆற்றை கடந்து, மலைகள் ஏறி, வனப்பகுதியில் 9 கி.மீ பயணித்து மருத்துவ சேவை
சட்டீஸ்கர் மாநிலத்தில், மலைகள் ஏறி, ஆற்றை கடந்து, வனப்பகுதியில் நடந்து சென்று கிராம மக்களுக்கு சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
Balrampur-இல் உள்ள Bachwar கிராமத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமிற்காக, சுகாதார பணியாளர்கள், முழங்கால் அளவு தண்ணீர் செல்லும் ஆற்றை கடந்து, மலைகள் ஏறி, வனப்பகுதியில் சுமார் 9 கிலோ மீட்டர் பயணித்து வருகின்றனர் .
இந்த கிராமத்தை அடையவே அரை நாள் ஆகிவிடும் என கூறும், பல்ராம்பூர் சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் Basant Singh, வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காகவும் சுகாதார பணியாளர்கள் அங்கு சென்று வருவதாக தெரிவித்தார்.
Comments