கடைகளில் பொருட்கள் வழங்கும் போது கவரை எச்சில் தொட்டோ, வாயால் ஊதியோ பிரிக்கக் கூடாது-சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

0 5952
உணவகங்கள், கடைகளில் பொருட்கள் வழங்கும் போது கவரை எச்சில் தொட்டோ, வாயால் ஊதியோ பிரிக்கக் கூடாது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

உணவகங்கள், கடைகளில் பொருட்கள் வழங்கும் போது கவரை எச்சில் தொட்டோ, வாயால் ஊதியோ பிரிக்கக் கூடாது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காய்கறிகள், மளிகை மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. உணவகங்கள், பேக்கரிகளில் பார்சல் சேவை மட்டும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உணவு பொருட்கள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை பார்சல் செய்யும் போது கவர்களை கையால் எச்சில் தொட்டு பிரிக்கவோ, வாயால் ஊதவோ கூடாது என அறிவுறுத்தியுள்ள சுகாதாரத்துறை, அதன் மூலம் கொரோனா பரவும் ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் ஊழியர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments