தெலுங்கானா மாநிலத்தில் முழு ஊரடங்கை முழுவதுமாக வாபஸ் பெற மாநில அமைச்சரவை முடிவு
ஞாயிறு காலை முதல் தெலங்கானாவில் ஊரடங்கை முற்றிலும் விலக்கிக் கொள்ள மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 19ஆயிரத்து 29 ஆக உள்ளது. புதிதாகத் தொற்று பாதிக்கும் விகிதமும் மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் மாநில அமைச்சரவை கூடி கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியது.
அப்போது மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனையை ஏற்று ஞாயிறு காலை 6 மணி முதல் ஊரடங்கை முற்றிலும் விலக்கிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுளையும் விலக்கிக் கொள்ள அனைத்துத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments